/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துர்க்கை அம்மனுக்கு ஆடிப்பூர வழிபாடு
/
துர்க்கை அம்மனுக்கு ஆடிப்பூர வழிபாடு
ADDED : ஜூலை 30, 2025 11:34 PM

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., இரண்டாம் சுரங்க பகுதியில் உள்ள வன ஜெயதுர்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.
நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்க பகுதியில் உள்ள வன ஜெய துர்கை அம்மன் கோவிலில் 39ம் ஆண்டு ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து வன ஜெய துர்க்கை அம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில் இரண்டாம் சுரங்க நுழைவு வாயிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர்.
விழாவில் வன ஜெய துர்க்கை அம்மன் வழிப்பாட்டு மன்ற தலைவர் வேலுசாமி, செயலாளர் வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன், பொருளாளர் கார்த்திக், இணை செயலாளர் சசிதரன்,காசியம்மாள் வேலுசாமி, சாந்தி ராஜமாரியப்பன், ஜீவானந்தம், சுப்புராஜ், ரவி, வேல்முருகன், ராஜா,ஆனந்த் உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.