/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரிகளில் சேர்க்கை: 27 வரை விண்ணப்பிக்கலாம்
/
அரசு கல்லுாரிகளில் சேர்க்கை: 27 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு கல்லுாரிகளில் சேர்க்கை: 27 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு கல்லுாரிகளில் சேர்க்கை: 27 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 15, 2025 02:23 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள ஏழு அரசு கலை அறிவியல் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்காக வரும் 27ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 2025--26ம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tngasa.in இணையதள முகவரியில் வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிதம்பரம, வடலுார், விருத்தாசலம், கடலுார் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, பண்ருட்டி அரசு கலை கல்லுாரிகளில், மொத்தம் 5,449 இடங்களுக்கு சேர்க்கை நடக்கிறது.
விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு கல்லூரி கல்வி இயக்கம் உதவி மையம் 044-24343106/24342911 எண்ணில் திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்பு கொள்ளலாம்.
மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் படிப்பதன் மூலம் கல்வி கட்டண விலக்கு, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் ரூ.1000, வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வகுப்புகள், அரசு கல்வி உதவித் தொகை, இலவச பஸ் வசதி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.