/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 22, 2024 06:22 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடியில் ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவர் பரமானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜோதிபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் பாலசுந்தரம் துவக்க உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் மோகன், மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், சுந்தர், குமார், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம், துணை சேர்மன் திருச்செல்வம், மாவட்ட பிரதிநிதி தேன்மொழி, ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய பொருளாளர் வாகீசன் நன்றி கூறினார்.