/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுக்கூட்டம்
/
அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுக்கூட்டம்
ADDED : அக் 28, 2024 05:27 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரையில் அ.தி.மு.க., 53ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷியம், பண்ருட்டி கமலக்கண்ணன், வடலுார் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளர்கள் ராமச்சந்திரன், கோபால் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாநில தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, கோவை ராதாகிருஷ்ணன், பக்தரட்சகன், மாவட்ட பொருளாளர் தேவநாதன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய சேர்மன் கலையரசி கோவிந்தராஜ், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். மாயவேல் நன்றி கூறினார்.