/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
/
சிதம்பரத்தில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 29, 2024 05:54 AM

சிதம்பரம்: உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு கட்சியினர் உழைக்க வேண்டும் என, கட்சியினரை, பாண்டியன் எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டார்.
சிதம்பரத்தில் அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில மைப்பு செயலாளர் முருகுமாறன், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, இலக்கிய அணி தில்லை கோபி, பாசறை செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசுகையில்,பொதுச்செயலாளர் பழனிச்சாமி உத்தரவுபடி, உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல்களில், கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு நாம் உழைக்க வேண்டும் என்றார்,
கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அசோகன், முருகையன், சிவக்குமார்,ஜோதிபிரகாஷ், நவநீதகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர்கள்தமிழரசன், எம்ஜிஆர் தாசன், பூமாலை கேசவன், சங்கர், நகர துணை செயலாளர் அரிசக்திவேல், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, மு.கூட்டுறவு சங்கதலைவர் வசந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துணை செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.