தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க., மனித சங்கிலி

மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க., மனித சங்கிலி

மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க., மனித சங்கிலி


ADDED : மார் 13, 2024 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறியதாக, தி.மு.க., அரசை கண்டித்து, கடலுார் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க, வினர் மனித சங்கலி போராட்டம் நடத்தினர்.

கடலுாரில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் குமார், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், ஜெ., பேரவை ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம், பகுதி செயலாளர்கள் மாதவன், வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், கந்தன், வினோத்ராஜ், மீனவரணி குப்புராஜ், அண்ணா தொழிற்சங்க பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிதம்பரம்


மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கண்டன உரையாற்றினார். அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், பாசறை செயலாளர் சண்முகம், இலக்கிய அணி தில்லை கோபி, இணை செயலாளர் ரெங்கம்மாள், துணை செயலாளர் செல்வம் பங்கேற்றனர். துணை செயலாளர் அரிசக்திவேல் நன்றி கூறினார்.

பரங்கிப்பேட்டை


நகர செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், மாவட்ட துணை செயலாளர் செல்வம், நகர ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம முன்னிலை வகித்தனர். பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் உரையாற்றினர்.

நகர அவைத் தலைவர் மலைமோகன், இளைஞரணி சங்கர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன் பங்கேற்றனர்.

பண்ருட்டி


பஸ்நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடந்தது. போதை விழிப்புணர்வு குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நகர அ.தி.மு.க., சார்பில் நான்குமுனை சந்திப்பில் நடந்த போராட்டத்திற்கு நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கனகராஜ், முன்னாள் ஜெ.பேரவை செயலர் கலையரசன் பங்கேற்றனர்.

விருத்தாசலம்


மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, பச்சமுத்து, தம்பிதுரை முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் அருளழகன், ஐ.டி., அணி மண்டல செயலாளர் அருண், பாசறை மாவட்ட செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர்கள் விஜயகுமார், இளையராஜா, நகர தலைவர் தங்கராசு பங்கேற்றனர்.

நெல்லிக்குப்பம்


நகர செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோபு, சரவணன், சுந்தரமூர்த்தி, சேகர், ரங்கராஜன், பாரி, தமிழ்மாறன், அய்யனார் கவுன்சிலர் புனிதவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேத்தியாத்தோப்பு


,நகர செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராசு, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராமலிங்கம் பங்கேற்றனர்.

புவனகிரி


நகர செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி சித்ராபழனியப்பன், கவுன்சிலர் ஜெயப்பிரியா ரகுராமன், தொழில்நுட்ப பிரிவு ஜெயராஜ், மாணவரணி சிவஞானம், மனோகர், முன்னாள்கூட்டுறவு வங்கித் தலைவர் சசிசெல்வராஜ்பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us