/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
/
மாவட்டத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 09, 2024 06:29 AM

கடலுார் : தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க, சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பாரதி சாலையில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார். மருத்துவரணி சீனுவாச ராஜா, எம்.ஜி.ஆர்., மன்ற சுப்ரமணியன், இளைஞரணி கார்த்திகேயன்,சேவல் குமார், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம், மாநகர செயலாளர்கள் வெங்கட்ராமன், கெமிக்கல் மாதவன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், கந்தன், வினோத்ராஜ், கவுன்சிலர் தஷ்ணா பங்கேற்றனர்.
பண்ருட்டி:பண்ருட்டி சட்டசபை தொகுதி சார்பில் பஸ் நிலையம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடந்தது. முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம்,மாவட்ட கவுன்சிலர்கள் தேன்மொழி, சுந்தரி முருகன், நெல்லிகுப்பம் முன்னாள் நகர செயலாளர் சவுந்தர் பங்கேற்றனர்.
தொரப்பாடி பேரூராட்சியில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
பரங்கிப்பேட்டை:முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், நகர இளைஞரணி செயலாளர் சங்கர், அவைத் தலைவர் மலைமோகன்,மீனவரணி வீராசாமி ஆகியோரும், கிள்ளையில் போராட்டத்தில் நகர செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.
இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய செயலாளர் அசோகன் பங்கேற்றனர்.
சிதம்பரம்:கிழக்கு மாவட்ட அ.தி.முக., சார்பில், சிதம்பரம் மேல வீதியில் நடந்த போராட்டத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அவைத் தலைவர் குமார், பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், தில்லை கோபி பங்கேற்றனர்.
காட்டுமன்னார்கோவிலில் மாநில அமைப்பு செயலாளர், முருகுமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வாசுமுருகையன், பேரூராட்சி செயலாளர் எம்ஜிஆர் தாசன், ஜெ., பேரவை பாலமுருகன் பங்கேற்றனர்.
நெல்லிக்குப்பம்:நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த போராட்டத்தில் நகர செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் மனோகர், துணை செயலாளர் சேகர் பங்கேற்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர, அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் பூமாலை. கேசவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஜோதிபிரகாஷ், நவநீதகிருஷ்ணன், ஜெ. பேரவை செயலாளர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு துணை செயலாளர் பூமாலை சண்முகம் பங்கேற்றார்.
விருத்தாசலம்:நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை செயலர் அருள்அழகன், ஒன்றிய செயலர்கள் பச்சமுத்து, தம்பிதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண், பொதுக்குழு உறுப்பினர் அரங்க மணிவண்ணன், வழக்கறிஞர் விஜயகுமார் பங்கேற்றனர்.
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு கடைவீதியில் நடந்த போராட்டத்திற்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், கருப்பன், அவைத்தலைவர் செல்வராசு பங்கேற்றனர்.