/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
சிதம்பரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2024 05:53 AM

சிதம்பரம்: தி.மு.க., அரசை கண்டித்து, கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் சிதம்பரத்தில் இன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க, பாண்டியன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை:
பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆண்ட்ரோ, மருமகள் மார்லினா தம்பதியினர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த பட்டியலின பெண்ணை, டாக்டர் படிப்பு படிக்க வைக்கிறேன் என கூறி அழைத்து சென்று, வீட்டு வேலை வாங்கியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர்.
சம்மந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுகை தடுப்புச் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆளும் தி.மு.க அரசை கண்டித்தும், சிதம்பரம் காந்தி சிலை அருகே இன்று (1ம் தேதி) காலை 9:00 மணியளவில், ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.