/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
விருத்தாசலத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : மார் 01, 2024 12:20 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அ.தி.மு.க., சார்பில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பிதுரை, வேல்முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் வழக்கறிஞர் அருண் முன்னிலை வகித்தனர்.
மாநில பேரவை துணை செயலாளர் அருள் அழகன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் மருதை முனுசாமி, சின்ன ரகுராமன், நகர துணை செயலாளர் அரங்க மணிவண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்கள் விஜயகுமார், ராஜேந்திரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் கோபி காளிதாஸ், தலைமை பேச்சாளர்கள் டி.கே.கலா, சென்னை கணபதி பேசினர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

