ADDED : அக் 17, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுாரை சேர்ந்தவர் முருகேசன் மகன் சவுந்தர்ராஜன்,37; விவசாயி. தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கடந்த சில மாதங்களாக சவுந்தர்ராஜன் வற்புறுத்தி வந்தார். பல இடங்களில் பெண் பார்த்தும், திருமணம் கூடிவரவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த சவுந்தர்ராஜன் கடந்த 12ம் தேதி விஷம் குடித்தார். கடலுார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.