/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் சமர்ப்பிக்க அறிவுரை
/
வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் சமர்ப்பிக்க அறிவுரை
வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் சமர்ப்பிக்க அறிவுரை
வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் சமர்ப்பிக்க அறிவுரை
ADDED : மார் 06, 2024 02:26 AM
கடலுார் : கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் ஆதார் எண், ரேஷன் கார்டு எண் சமர்ப்பிக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடலுார் மண்டல துணைப் பதிவாளர் சிவராஜ் (வீட்டு வசதி) விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மண்டல துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் விவரங்களை அளிக்காதவர்கள் ஒரு வாரத்திற்குள் தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு வீட்டு சங்கங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இல்லையெனில் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தேர்தலில் ஓட்டளிக்கவோ, போட்டியிடவோ தகுதியிழக்க நேரிடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.