/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெற்பயிரில் வண்டு தாக்குதல் விவசாயிகளுக்கு ஆலோசனை
/
நெற்பயிரில் வண்டு தாக்குதல் விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : நவ 03, 2024 06:59 AM
நெல்லிக்குப்பம்: நெல் பயிரில் முள்ளு வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் நடவு செய்துள்ள நெல் பயிரில் முள்ளு வண்டு என கூறப்படும் ஹிஸ்பா வண்டு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதை கட்டுப்படுத்த தழைச்சத்தை அளவோடு இட வேண்டும். மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 வரை விளக்கு பொறி வைத்து தாய் வண்டுகளை அழிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு அசாடிராக்டீன் 1 லிட்டர், பிப்ரோனில் 400 மி.லி, குளோர்பைரிபாஸ் 400 மி.லி. இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை கைத்தெளிப்பான் மூலம் தெளித்து வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என, தெரிவித்துள்ளார்.