ADDED : மார் 10, 2024 06:17 AM
அ நிறம் | அளவு
சிறுபாக்கம், : மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது
கூட்டத்திற்கு, சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் கலைச்செல்வி செல்வராசு, பி.டி.ஓ.,க்கள் வீராங்கன், தண்டபாணி முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் சக்திவேல் வரவேற்றார். துணை பி.டி.ஓ.,க்கள், பொறியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், தேர்வு செய்யப்பட்ட திட்டப்பணிகளை விரைவில் துவங்கவது, நிலுவை பணிகளை விரைந்து முடிப்பது, 2024-25ம் ஆண்டிற்கான 15வது மானியக்குழு திட்டப் பணிகளை தேர்வு செய்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
