/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
65 ஆண்டுகளுக்கு பின் பட்டா வழங்கல் விருதையில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
/
65 ஆண்டுகளுக்கு பின் பட்டா வழங்கல் விருதையில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
65 ஆண்டுகளுக்கு பின் பட்டா வழங்கல் விருதையில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
65 ஆண்டுகளுக்கு பின் பட்டா வழங்கல் விருதையில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : மார் 14, 2024 11:45 PM

விருத்தாசலம்: என்.எல்.சி., நிறுவனத்திற்கு கடந்த 65 ஆண்டுகளுக்கு முன் நிலம் வழங்கிய புதுக்கூரைப்பேட்டை விஜயமாநகரம் கிராம மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில், நேற்று விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை கிராம மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள்  ராதாகிருஷ்ணன், சபா ராஜேந்திரன் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் முன்னிலை வகித்தனர்.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் வரவேற்றார்.  அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 3,543 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.
இதில், நகராட்சி துணை சேர்மன் ராணி தண்டபாணி, ஒன்றிய சேர்மன் மலர் முருகன், ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், பாவாடை கோவிந்தசாமி, தங்க ஆனந்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், நகர துணை செயலாளர் ராமு மற்றும் தி.மு.க., காங்., நிர்வாகிகள், வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தாசில்தார் உதயகுமார் நன்றி கூறினார்.

