UPDATED : ஆக 06, 2026 06:49 PM
ADDED : ஆக 06, 2026 06:32 PM
ராமநத்தம்:மங்களூர் ஒன்றியத்தில் குறுவை நெல் சாகுபடி வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மங்களூர் ஒன்றியத்தில் கிணற்று பாசனம் மூலம் இந்தாண்டு குறுவை பட்டத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நெல் வயல்களை வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமிர்தராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு, கொரக்கவாடி, கீழ்செருவாய் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அதில், நெல் இயந்திர நடவு மற்றும் நேரடியாக விதைப்பு செய்த விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 4 ஆயிரம் வரவு வைக்கப்படுவது, மானிய விலையில் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆய்வின்போது, மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) கீர்த்தனா, வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
