/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
/
நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
ADDED : ஜன 07, 2024 05:48 AM

சேத்தியாத்தோப்பு; கீரப்பாளையம் வட்டாரத்தில் நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
புவனகிரி அடுத்த கீரப்பாளையம் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பால் இறுகும் பருவம் மற்றும் ஒருசில பகுதிகளில் நெல்மணிகள் விட்டுள்ள நிலையில் புகையான் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனையறிந்த விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் நடராஜன், கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் தலைமையில் வேளாண் விஞ்ஞானிகள் குழுவினர் சிறுகாலுார், மனக்குடையான்இருப்பு, அய்யனுார் பகுதிகளில் நெல் வயல்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது, புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த தழைச்சத்து உரங்களை தெளிக்க வேண்டும். வயலில் நீரினை வடியவைப்பதன் மூலம் நெற்பயிரில் ஒரு துாரிலிருந்து மற்ற துார்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.
நெற்பயிர்களை நன்கு விளக்கி பட்டம் அமைத்து காற்றோட்டம் ஏற்படுத்தி துார் பகுதி வரை, சூரிய வெளிச்சம் சென்றடையச் செய்தல் வேண்டும் என, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
மேலும், வயலில் தண்ணீர் வடிந்தபிறகு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதன் மூலம் புகையான் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்தனர்.
வேளாண் அலுவலர் சிவப்பிரியன், உதவி அலுவலர் திவாகர் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.