/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
/
நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
நெற்பயிரில் புகையான் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
ADDED : ஜன 10, 2025 06:24 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு மற்றும் மேல்புவனகிரி வட்டாரத்தில் சம்பா வயல்களில் புகையான் தாக்குதல் நெற்பயிர்களை வேளாண் விஞ்ஞானிகள ஆய்வு செய்து, கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
மேல்புவனகிரி வட்டாரத்தில் 10,550 ஹெக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்களில பால் கட்டும் பருவம், பூக்கும் பருவம், அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது காலநிலை மாற்றம் காரணமாக வயல்களில் திட்டு திட்டாக புகையான் தாக்குதல் உள்ளது.
விவசாயிகள் புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலுார், கரைமேடு, அழிச்சிக்குடி ஆகிய பகுதியில் புகையான் தாக்குதலுக்கு உள்ளான வயல்களில் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் நடராஜன், பாரதிகுமார், புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் ஆகியோர் ஆய்வு செய்து, கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
ஏற்பாடுகளை வேளாண் துணை மேலாளர் பாலசரவணன், உதவி வேளாண் அலுவலர் செந்தில் , தொழில்நுட்ப மேலாளர் இளையராஜா செய்திருந்தனர்.

