/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்பட்டாம்பாக்கத்தில் வேளாண் கருத்தரங்கு
/
மேல்பட்டாம்பாக்கத்தில் வேளாண் கருத்தரங்கு
ADDED : ஜன 10, 2024 12:12 AM

நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கத்தில் வேளாண் நவீன மயமாக்கல் திட்டம் குறித்த 2 நாள் கருத்தரங்கம் நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில், தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. வேளாண துணை இயக்குனர் பூங்கோதை வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர் ரவிச்சந்திரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், ஆராய்ச்சி நிலைய தலைவர்கள் பாஸ்கர், விஜய்செல்வராஜ், கால்நடைத்துறை இணை இயக்குனர் குபேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கிலப் நீர் மேலாண்மையின் அவசியம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, நிலத்தடி நீர் பாதுகாப்பு, விளை பொருட்களை சந்தைபடுத்துவது உட்பட பல தலைப்புகளில் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
கருத்தரங்கம் நடந்தபோது, நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என கூறி, விவசாயிகள் ராமானுஜம், திருவேங்கடம், வெங்கடேசன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

