/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவர்கள் பயிற்சி முகாம்
/
வேளாண் மாணவர்கள் பயிற்சி முகாம்
ADDED : டிச 28, 2025 06:16 AM

புவனகிரி: அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி பெறும் சிறப்பு முகாம் மஞ்சக்கொல்லையில் நடந்தது.
முன்னாள் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாணவர் தலைவி டோனிஷா வரவேற்றார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் மதியழகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் ராஜாராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் முகாமை துவக்கி வைத்தார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை தலைவர் தமிழ்ச்செல்வி, ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜா, வழிகாட்டு ஆசிரியர் காளிதாசன் ஆலோசனைகள் வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை வேளாண் மாணவிகள் எல்சியா, திவ்யஸ்வேதா, இனிதா, எப்சிபா, கஜலட்சுமி, இனியா, இலக்கியா, திவ்யதர்ஷினி, பிரியா, மெர்லின் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர். திவ்யதர்ஷினி நன்றி கூறினார்.

