தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 28, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி.,க்கு வீடு, நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார்.

இதில், 10 கிராம மக்களின் போராட்டம், 4 கிராமங்களுக்கு மட்டும் நிவாரணமா? மீதம் உள்ள கிராமங்களுக்கு நிவாரணம், வேலை வாய்ப்புகளை உடனே வழங்க வேண்டும்;

கம்மாபுரம், கோபாலபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சாத்தப்பாடி, ஊ.ஆதனுார் ஆகிய கிராமங்களின் நிலங்களுக்கு உயர் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்;

கோட்டகம், கொளக்குடி, வளையாமாதேவி, கங்கைகொண்டான் விவசாயிகளுக்கு மீதம் உள்ள நிவாரணம் மற்றும் வாழ்வதார தொகையை வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us