UPDATED : அக் 07, 2026 05:10 PM
ADDED : அக் 07, 2026 05:06 PM
திட்டக்குடி: திட்டக்குடியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு சின்னதுரை தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சுப்ரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் உலகநாதன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் பூமாலை, பொருளாளர் கொளஞ்சி, கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், திட்டக்குடி தாலுகா, புலிவலத்தில் வசிக்கும் ஆதி திராவிடர், மலைக்குறவர் குடும்பங்களுக்கு மனைப் பட்டா; சலவை தொழிலாளர்களுக்கு குடிமனை பட்டா வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் செல்வராசு நன்றி கூறினார்.
