/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையால் மரம் விழுந்து வேன் சேதம் வேளாண் மாணவர்கள் தப்பினர்
/
மழையால் மரம் விழுந்து வேன் சேதம் வேளாண் மாணவர்கள் தப்பினர்
மழையால் மரம் விழுந்து வேன் சேதம் வேளாண் மாணவர்கள் தப்பினர்
மழையால் மரம் விழுந்து வேன் சேதம் வேளாண் மாணவர்கள் தப்பினர்
ADDED : மே 06, 2025 12:21 AM

விருத்தாசலம்,; விருத்தாசலம் அருகே வேளாண் கல்லுாரி மாணவர்கள் சென்ற வேன் மீது பழமையான மரம் விழுந்தது.
விருத்தாசலத்தில் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் முந்திரி ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியார் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மாணவ, மாணவிகள் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.
இந்நிலையில், திருச்சியை சேர்ந்த வேளாண் கல்லுாரி மாணவர்கள் 10 பேர், விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தில் நேற்று வயல்வெளி பயிற்சிக்கு புறப்பட்டனர். கச்சிபெருமாநத்தத்தில் சாலையோரம் 11:00 மணிக்கு வேனை நிறுத்திவிட்டு, அனைவரும் இறங்கிச் சென்ற சிறிது நேரத்தில், அருகில் இருந்த பழமையான அரச மரம் வேருடன் சாய்ந்து வேன் மீதும், சாலையின் குறுக்கேயும் விழுந்தது.
நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால், மரம் வலுவிழந்து சாய்ந்ததது தெரிந்தது.
வேனில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மரம் விழுந்ததால் விருத்தாசலம் - மேமாத்துார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருத்தாசலம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கிராம மக்கள் உதவியுடன் மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

