தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்


ADDED : பிப் 16, 2025 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் நேற்று கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.

மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலமுருகன், மாவட்டஇணைச் செயலாளர் ரங்கம்மாள் முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி வரவேற்றார்.

பிரசாரத்தை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் குமார், துணைச் செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அசோகன், பாசறை செயலாளர் சண்முகம், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள்தலைவர் வசந்த்.

மீனவரணி செயலாளர் வீராசாமி, முன்னாள் துணைச் சேர்மன் முடிவண்ணன், முன்னாள்ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, பாஸ்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், சிவராஜ், செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us