UPDATED : அக் 17, 2026 04:18 PM
ADDED : அக் 17, 2026 04:16 PM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
சேத்தியாத்தோப்பு கூட்ரோட்டில், புவனகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ,, பேரவை தலைவர் நன்மாறன், ஒன்றிய துணை செயலாளர் பிரித்திவி, இந்திரா, முன்னாள் சேர்மன் லட்சுமிநாராயணன், நகர செயலாளர் மணிகண்டன், ஜெ., பேரவை நகர செயலாளர் கார்த்திகேயன், ஜெ., பேரவை ஒன்றிய நிர்வாகி நாகராஜன், ஓ்ட்டுனர் பிரிவு சிவபாலன், மணவாளன், அண்ணாதுரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
