ADDED : அக் 18, 2026 05:40 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம், கனகராஜன், சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். விழாவில், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பன், கிளை செயலாளர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.
