ADDED : செப் 29, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு, செப்.30–
கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த ஓடாக்கநல்லுாரில் நடந்தது.
மாவட்ட செயலாளர் பாண்டியன் வழிகாட்டுதலுடன் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் சதிஷ்குமார் தலைமை தாங்கினார். பூதங்குடி பாஸ்கரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், மகளிரணி செல்வி, செல்வராசு, அரங்கப்பன், அருள்முருகன்தியாகராஜன், முருகன், பாண்டியன், சத்தியசீலன், வேலு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், புதிய ஒன்றிய செயலாளர் சதீஷ்குமாருக்கு நிர்வாகிகள் அனைவரும் பாகுபாடின்றி ஒருங்கிணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
