/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 22, 2025 07:13 AM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியில் கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிசக்திவேல் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயபால், வரும் சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதேப் போன்று மாமங்கலம், கொண்டசமுத்திரம், ஆண்டிப்பாளையம், கோவிந்தராஜன்பேட்டை, சித்தமல்லி, அறந்தாங்கி, அகரபுத்துார் உள்ளிட்ட கிராமங்களில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், உதயகுமார், அம்பலவாணன், பார்த்திபன், இளங்கோவன், ரஞ்சித்குமார், மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.