/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : அக் 14, 2025 07:22 AM

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கெங்கைகொண்டான் நகர செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில அம்மா பேரவை துணை செயலாளர் அருளழகன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன்,ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் டாக்டர் பிரியதர்ஷன், வழக்கறிஞர் முகமதுநாசர், நிர்வாகிகள் அன்வர்தீன், சதீஷ்குமார், சிவகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.