ADDED : ஜூன் 07, 2025 10:25 PM

பரங்கிப்பேட்டை : கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் பரங்கிப்பேட்டையில் திண்ணை பிரசாரம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் வரவேற்றார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கடந்த அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி, ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, நகர துணை செயலாளர் இக்பால், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
