அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் தேவாலயங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் தேவாலயங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 19, 2026 06:46 PM

விருத்தாசலம்: புவனகிரி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன், ஞாயிறு சிறப்பு திருப்பலிக்கு வந்த கிறிஸ்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
புவனகிரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன், கம்மாபுரம் ஒன்றிய தேவாலயங்களில் நேற்று ஞாயிறு சிறப்பு திருப்பலிக்கு வந்த கிறிஸ்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
விருத்தாசலம் அடுத்த அரசக்குழி புனித உத்தரிய அன்னை ஆலய பங்குத்தந்தைகளுக்கு சால்வை அணிவித்து, ஓட்டு சேகரித்தார். அப்போது, அரசக்குழி பங்கு சார்பில் வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு சால்வை அணிவித்து, ஆசி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலயத்தில் ஓட்டு சேகரித்தார். மேலும், திருப்பலி முடிந்து வந்த கிறிஸ்தவர்களிடம் அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன. அப்போது, வேட்பாளர் அருண்மொழிதேவன், 'முன்னாள் முதல்வர் ஜெ., செயல்படுத்திய திட்டங்கள் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்க வந்தால் தொடரும்.
பெண்கள் பாதுகாப்புடன் வாழ குற்றங்கள் தடுக்கப்படும். தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்த எனக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்' என்றார். ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகசிகாமணி, ஒன்றிய துணை செயலாளர் சேகர், ஜெ., பேரவை துணை செயலாளர் குறிஞ்சி செல்வன், நிர்வாகிகள் ரெஜினாமேரி, வெங்கடேஸ்வரி, வேலாயுதம், பிரபாகரன், பாபு. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் அருண், விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், தெற்கு ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனஸ்ட்ராஜ், தொழிற்சங்க நிர்வாகி அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
