ADDED : ஏப் 01, 2026 06:47 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரியில் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் ஓட்டு சேகரித்தார்.
புவனகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் நேற்று முத்தாச்சியம்மன் பிள்ளையார் கோவில் தெரு, சந்தைதோப்பு, காமாட்சியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் ஓட்டு சேகரித்தார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், நகர செயலாளர் செல்வகுமார், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயபிரியா, நகர துணை செயலாளர் மனோகரன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சரவணன், மாவட்ட தொழில் நுட்ப பொருளாளர் ஜெயராஜ், நகர இளைஞரணி செயலாளர் அன்பரசன், கவுன்சிலர் பாலமுருகன், நிர்வாகிகள் தியாகராஜன், பாண்டியன், பாலாஜி, தேவராஜன் உடனிருந்தனர்.
