தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன்  ஓட்டு சேகரிப்பு  

 அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன்  ஓட்டு சேகரிப்பு  

 அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன்  ஓட்டு சேகரிப்பு  


ADDED : ஏப் 18, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 04:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: புவனகிரி தொகுதி, கீரப்பாளையம் ஒன்றியம் பெருங்காலுார், கொடியாளம், எசனை, துணி சரமேடு உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளர் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அருண்மொழிதேவன் பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் ஸ்டிக்கர் ஒட்டும் நிலையாக மாறிவிட்டது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு நிலவுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிறுமிகள் மீது பாலியல் சீண்டல் என கஞ்சா போதையால் சீரழிந்து வருகிறது.

அதற்கு ஆதாரமாக தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, சேலத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீதுள்ள ஒரே குற்றச்சாட்டு, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைதான் எனக்குறிப்பிட்டார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வருவதை பார்த்து மக்கள் தி.மு.க., வை வீட்டிற்கு அனுப்பிட முடிவு செய்து விட்டனர். அ.தி.மு.க., வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிகழ்ச்சியில், கீரப்பாளையம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கனகசிகாமணி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், சிதம்பரம் நகர நிர்வாகி சுந்தர், பா.ஜ., தேர்தல் தொகுதி பொறுப்பாளர் அர்ச்சனா ஈஷ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us