ADDED : ஏப் 04, 2026 09:32 PM

கடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் ஓட்டு சேகரித்தார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் புவனேந்திரன் போட்டியிடுகிறார். இவர், தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றிய பகுதிகளான தொண்டமாநத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாக்குறுதிகளை கூறி இரட்டை இலைக்கு ஓட்டளிக்குமாறு பிரசாரம் செய்தார்.
எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் பாஷ்யம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் லோகநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு ராமலிங்கம், முன்னாள் ஜெ., பேரவை செயலாளர் வீரமணி, ராமச்சந்திரன், பா.ம.க., ஒன்றிய செயலாளர் சுதாகர், பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் பாபு, விஜய், சீனிவாசன், சின்னத்தம்பி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
