ADDED : ஏப் 05, 2026 11:28 PM

சிதம்பரம்: அ.தி.மு.க., கூட்டணியில், சிதம்பரம் சட்டசபை தொகுதி வேட்பாளராக, மாவட்ட செயலர் பாண்டியன் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று சிதம்பரம் கொத்தவால் தெரு, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் குமார் உள்ளிட்ட வியாபாரிகள், சால்வை அணிவித்து வரவேற்றனர்.
மேலும் அங்குள்ள சிறு வியாபாரிகளிடம் வேட்பாளர் பாண்டியன், துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார்.
இதில் காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் மனோகரன், நாகராஜ், குப்புசாமி, ரவீந்திரன், ஆறுமுகம், குமரகுரு, கண்ணன், கார்த்தி, தொகுதி பொறுப்பாளர் செல்வி ராமஜெயம், அவைத்தலைவர் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் மாரிமுத்து, மாவட்ட அம்மா பேரவை இணைசெயலர் சண்முகம், மாவட்ட பாசறை செயலர் வசந்த், தொழில் நுட்ப பிரிவு செயலர் பிரபு, இளைஞரணி துணை செயலர் செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
