அடிப்படை வசதிக்கு முன்னுரிமை: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
அடிப்படை வசதிக்கு முன்னுரிமை: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 10, 2026 06:45 PM

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் நேற்று மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பகுதியில், ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெண்களுக்கான 10 ஆயிரம் வழங்கும் திட்டம், மாதம் 1000 ரூபாய் குடும்ப உதவி தொகை 2ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு முத்தான திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெ. தான் கொண்டு வந்தார். அதுபோன்று பெண்களுக்கு பல திட்டங்கள் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கொண்டு வரப்படும். தமிழகத்தில்,
போதை, கலாசாரம் ஒழிக்கப்படும். சட்டம் ஓழுங்கு சீராகும். அடிப்படை வசதிக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் நாகபூஷணம், தமிழ்செல்வன், சிவா, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சேகர், முன்னாள் செயலாளர் காசிநாதன், மேல்பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் அர்ஜூனன், பா.ம.க., மாவட்ட தலைவர் கவுரிசங்கர், முன்னாள் சேர்மன் கவுரிபாண்டியன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் சக்திவேல்,கலந்து கொண்டனர்.
