ADDED : ஏப் 04, 2026 05:56 PM

ராமநத்தம்: திட்டக்குடி (தனி) தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் அறிமுக கூட்டம், ராமநத்தம் அடுத்த வாகையூரில் நடந்தது. அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலர்கள் பா.ம.க., கார்த்திகேயன், அ.ம.மு.க., கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் பா.ஜ., தமிழழகன், ஐ.ஜே.கே., அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர் முருகுமாறன், தொகுதியில் அனைவரும் ஒருங்கிணைந்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், அவரை வெற்றி பெற செய்ய வலியுறுத்தினார்.
இதில், அ.தி.மு.க., வர்த்தகரணி மாநில துணை செயலர் சக்திவேல், வர்த்தகரணி மாவட்ட செயலர் அருள், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலர் முத்தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., நிர்வாகிகள் நீதிமன்னன், பாண்டியன், ராஜேந்திரன், முத்துப்பிள்ளை, மதியழகன், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
