ADDED : ஏப் 02, 2026 06:06 AM

பண்ருட்டி: பண்ருட்டி அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் பிரசாரம் துவக்கினார்.
பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மோ கன் நேற்று தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் இருந்து பிரசாரம் துவக்கினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன், பா.ம.க.,மாவட்ட தலைவர் கவுரிசங்கர், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் வினோத்குமார், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சக்திவேல், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளர் விக்கிதுரை, த.மா.க. நகர பொறுப்பாளர் கணேசன், முன்னிலை வகித்தனர்.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, கவுன்சிலர் வெங்கடேசன், நகர அவைதலைவர் ராஜதுரை, துணை செயலாளர் ரகுபதி, பா.ஜ., முன்னாள் நகர தலைவர் மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
தட்டாஞ்சாவடி, மந்திப்பாளையம், கோட்லாம்பாக்கம், தர்கா, எம்.ஜி.ஆர்., நகர், அம்மாபேட்டை, பண்டரக்கோட்டை, வாணியம்பாளையம், நல்லுார்பாளையம், பணப்பாக்கம், சின்னபேட்டை , திருத்துறையூர் உட்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
