ADDED : ஏப் 03, 2026 07:55 PM

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி சாத்திப்பட்டு கிராமத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் மோகன் பிரசாரம் செய்தார்.
பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று காலை சாத்திப்பட்டு ஊராட்சியை சேர்ந்த நெல்லித்தோப்பு, கொட்டிகோணாங்குப்பம், பலாப்பட்டு, கொட்டிகோணாங்குப்பம், நல்லாண்குப்பம், திருநங்கைவாடி, வடக்கு சாத்திப்பட்டு, நடுசாத்திப்பட்டு, தெ்றகு சாத்திப்பட்டு, மேட்டுக்குப்பம் , துண்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடம் அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறினார். அவருடன் முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோபு, ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், ராமசாமி, நாகபூஷணம், மாவட்ட துணை செயலர் கவுரிபாண்டியன், ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், இளைஞரணி செயலாளர் பிரபாகரன் ,முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சண்முகம், பா.ம.க., மாவட்ட தலைவர் கவுரிசங்கர், பா.ஜ.க., வினோத்குமார், அ.ம.மு.க.மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
