ADDED : ஏப் 09, 2026 06:20 AM

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி, அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் நேற்று காலை புலவனுார், மேல்குமாரமங்கலம், தட்டாம்பாளையம், திராசுபாளையம், மாளிகைமேடு, மேல்கவரப்பட்டு, பக்கிரிப்பாளையம், பகண்டை, கோழிப்பாக்கம், கொங்கராயனுார், பி.என்.பாளையம் ஆகிய பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோபு, ஒன்றிய செயலாளர்கள் நாகபூஷணம், தமிழ்செல்வன், ராமசாமி, மாவட்ட துணை செயலர் கவுரிபாண்டியன், ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், இளைஞரணி செயலாளர் பிரபாகரன், பா.ம.க., மாவட்ட தலைவர் கவுரிசங்கர், பா.ஜ., வினோத்குமார், ஒன்றிய பொருளாளர் பாண்டியன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சக்திவேல், பா.ம.க., ஒன்றிய செயலர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
