ADDED : ஏப் 17, 2026 07:08 PM

பண்ருட்டி: பண்ருட்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் அண்ணாகிராமம், கீழ்கவரப்பட்டு, மேல்கவரப்பட்டு, ஆண்டிப்பாளையம், எம்.புதுப்பாளையம், பி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில், நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன் மகளிர் குடும்பதொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அ.தி.மு.க., அரசு, பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் முதல் கல்லுாரி படிக்கும் மாணவர்கள் வரையில், கல்வியில் சிறப்பு பெற பல சலுகைகளை வழங்கியது.
அந்த திட்டங்களை தி.மு.க., நிறுத்திவிட்டது. தி.மு.க., மோசடி அறிவிப்புகளை வழங்கி ஏமாற்ற நினைக்கிறது.
போதை கலாசாரம் அதிகரித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக மாற வேண்டும். என்னை எப்போது அழைத்தாலும் உங்கள் பகுதி பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். அரசின் திட்டங்கள் முழுமையாக பெற்று தருவேன். பண்ருட்டி தொகுதியை தமிழகத்தில் சிறப்பான தொகுதியாக மாற்றித்தருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர் நாகபூஷணம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சக்திவேல், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் மகாதேவன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் கண்மணி, வழக்கறிஞர் பீர்பால், இளம் பாசறை ஒன்றிய செயலாளர் சபரி, தகவல் தொழில்நுட்ப அணி கலைசெல்வன், ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, பா.ஜ., வினோத், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
