அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 07, 2026 11:06 PM

திட்டக்குடி:திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் முருகுமாறன் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று அவர் பெருமுளை, சிறுமுளை, புதுகுளம், நாவலுார், நிதிநத்தம், குமாரை, நெடுங்குளம், செவ்வேரி, இ.கீரனுார், மேல் ஆதனுார், கீழ் ஆதனுார் உள்ளிட்ட கிராமங்களில் பொது மக்களிடம் தி.மு.க., அரசின் போதை கலாச்சார சீரழிவு, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கைகளை கூறி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழ் அழகன், பா.ம.க., மாவட்ட தலைவர் கருணாநிதி, கோகுல மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் அ.தி.மு.க., இளங்கோவன், பா.ம.க., கோபி, சரவணன், பா.ஜ., ராமச்சந்திரன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் முத்துராமன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அருள், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.
