அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 16, 2026 06:07 PM

திட்டக்குடி:திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட, சிறுபாக்கம் அடுத்த மலையனுார், ம.கொத்தனுார், ம.புதுார், மங்களூர், கச்சிமயிலுார், வினாயகநந்தல், பாசார், சிறுகரம்பலுார், கழுதுார், அரியநாச்சி, தொண்டங்குறிச்சி, பில்லுார், கல்லுார், ம.பொடையூர், ஆவட்டி, ஆ.குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு, சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்றனர்.
அப்போது அவர் பேசுகையில், 'திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மிகவும் பின்தங்கியே உள்ளன. நான் வெற்றி பெற்றால் அடிப்படை வசதிகள் செய்து, தொகுதியை மேம்படுத்துவேன். அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் ஏழை, நடுத்தர மக்களுக்கு தேவையான பயனளிக்கும் வகையில் பல நல்ல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று பழனிசாமி முதல்வராவது உறுதி' என்றார்.
அப்போது, ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாநில வர்த்தக அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட வர்த்தக அணி அருள், மாவட்ட பொருளாளர் அய்யாசாமி, ஒன்றிய அவை தலைவர் பெருமாள், ஜெ., பேரவை செயலர் செந்தில், தகவல தொழில்புநுட்பட அணி மாவட்ட செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.
