அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 17, 2026 05:37 PM

திட்டக்குடி: திட்டக்குடியில் உள்ள மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசலில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், கூட்டணி கட்சியினருடன், பள்ளி வாசல் நிர்வாகிகளை சந்திந்து கட்சி தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசுகையில், 'திட்டக்குடி சட்டசபை தொகுதி பின்தங்கி உள்ளது. நான் வெற்றி பெற்றால் அடிப்படை வசதிகள் செய்து, தொகுதியை மேம்படுத்துவேன். மேலும், அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் ஏழை, நடுத்தர மக்கள் பயனளிக்கும் வகையில் பல நல்ல வாக்குறுதிகள் உள்ளன,' எனக்கூறி, ஓட்டு சேகரித்தார்.
மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சக்திவேல், நகர செயலாளர் நீதிமன்னன், ஜெ., பேரவை பொருளாளர் முல்லைநாதன், நகராட்சி கவுன்சிலர் ராஜவேல், பள்ளி வாசல் செயலாளர் அப்துல் அஜீஸ், துணை செயலாளர் அஸ்கர் அலி, நிர்வாகிகள் நுார் முகமது, முபாரக் அலி, ஜாபர் அலி, நிஜாம் முகமது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலளார் முத்தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.
