அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 18, 2026 06:09 PM

திட்டக்குடி;திட்டக்குடி அடுத்த மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஈ.கீரனுார், புலிவலம் ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பொது மக்களை சந்திந்து கட்சி தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஓட்டு சேகரித்தார். வேட்பாளர் முருகுமாறனுக்கு கிராம மக்கள் மலர் துாவி, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது அவர், 'திட்டக்குடி சட்டசபை தொகுதி சுகாதாரமான குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளில் மிகவும் பின்தங்கி உள்ளது. நான் வெற்றி பெற்றால் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து, தொகுதியை மேம்படுத்துவேன். மேலும், அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது' எனக்கூறி, ஓட்டு சேகரித்தார்.
ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் முத்துராமன், ஜெ., பேரவை செயலாளர் வேல்முருகன், பூத் கமிட்டி பொறுப்பாளர் திருமால், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலளார் முத்தமிழ்ச்செல்வன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அருள், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.
