அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 20, 2026 06:41 PM

திட்டக்குடி: திட்டக்குடி நகராட்சி, 24 வார்டுகளில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனை, ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி ஓட்டு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் முருகுமாறனுக்கு, வார்டு மக்கள் மலர் துாவி, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அங்கு அருண்மொழிதேவன் பேசியதாவது;
திட்டக்குடி தொகுதியில் கடந்த, 5 ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளவில்லை. சிமெண்ட் சாலை, மேல்நிலை குடிநீர் தொட்டி, பணிகளை மட்டும் செய்துள்ளனர். இதுதான் தி.மு.க.,வின் சாதனை.
அ.தி.மு.க., ஆட்சியில் திட்டக்குடி தொகுதிக்கு ஒருங்கிணைந்த கோர்ட், போக்குவரத்து பணிமனை, சார்பதிவாளர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், திட்டக்குடி அரசு கலைக்கல்லுாரி, வெள்ளாற்றில் தடுப்பணைகள் போன்ற பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டக்குடி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நகர செயலாளர் நீதிமன்னன், தொகுதி பொறுப்பாளர் பெரியசாமி, த.மா.கா., பூமிநாதன், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் , பா.ம.க., ஒன்றிய செயலாளர் அங்கமுத்து, ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
