அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 21, 2026 11:20 PM

திட்டக்குடி:திட்டக்குடி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திட்டக்குடி மற்றும் தொகுதிக்குட்பட்ட புலிவலம், ஈ.கீரனுார், ஆவினங்குடி, பட்டூர், போத்திரமங்கலம், அரியாவி, நந்தப்பாடி உட்பட பல கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியாவது; கடந்த 5 ஆண்டுகளில் திட்டக்குடி தொகுதி எவ்வித வளர்ச்சி பணிகளும் இல்லை. தொகுதி மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா புழக்கம் அதிகரித்தது தான் தி.மு.க., அரசின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், ராஜேந்திரன், முத்து, ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் அசோக்குமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சக்திவேல், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அருள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
