ADDED : ஏப் 16, 2026 06:04 PM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: நடராஜர் கோவில் தீட்சிதர்களிகளிடம், அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
சிதம்பரம் தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் போட்டியிடுகிறார். அவர், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நாள்தோறும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உள்ள செயலர் அலுவலகத்தில், பொது தீட்சிதர்கள் செயலாளர் ஜெயசூர்யாவை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, கோவில் பொது தீட்சிதர்கள் ேஹமசபேசன், , வெங்கடேசன், நடனசநாபதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அவர்களிடம், எப்போதும் உறுதுணையாக இருப்பதாக கூறி, வேட்பாளர் பாண்டியன் ஓட்டு சேகரித்தார்.
