தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 100 நாட்களில் அடிப்படை வசதி :அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி

 100 நாட்களில் அடிப்படை வசதி :அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி

 100 நாட்களில் அடிப்படை வசதி :அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி


ADDED : ஏப் 09, 2026 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேப்பூர்: 100 நாட்களில் தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகளில் உள்ள குறைகள் தீர்க்கப்படும் என அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி அளித்தார்.

திட்டக்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் கடந்த சில தினங்களாக, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து, மங்களூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், அ.களத்தூர், அடரி உட்பட, 11 ஊராட்சிகளில் நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு, கிராமங்கள் தோறும் பொது மக்கள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, வேட்பாளர் முருகுமாறன் பேசியதாவது:

திட்டக்குடி தொகுதியில் உள்ள கிராமங்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பின் தங்கியுள்ளது. சட்டசபை தேர்தலில் நான் வெற்றி பெற்றதும், அடுத்த, 100 நாட்களில், தொகுதி முழுவதும் உள்ள கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகளில் உள்ள குறைகள் முழுமையாக தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் அசோக்குமார், அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் அய்யாசாமி, ஒன்றிய செயலர்கள் அ.தி.மு.க., இளங்கோவன், பா.ம.க, கோபி, பா.ஜ., ஒன்றிய தலைவர் சசிகுமார், அ.தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், அருள், முத்தமிழ்ச்செல்வன், தங்கவேல், குமார், செந்தில், சந்திரபாபு, மணிகண்டன், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us