ADDED : ஏப் 03, 2026 05:41 AM

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் நேற்று தையல் கலைஞர்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.
சிதம்பரம், பச்சையப்பா பள்ளி அருகில், தமிழ்நாடு தையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் கிளை தலைவர் நாகராஜன், செயலாளர் நந்தகோபால் மற்றும் நிர்வாகிகள் ராமதாஸ், ரமேஷ், செல்வம், உள்ளிட்ட தையல் கலைஞர்களை சந்தித்து வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது, அ.தி.மு.க., மாவட்ட அவை தலைவர் குமார், தொகுதி பொறுப்பாளர் செல்வி ராமஜெயம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மாரிமுத்து, ஜெ., பேரவை இணை செயலாளர் சண்முகம், நகர செயலாளர் செந்தில்குமார், விவசாய பிரிவு செயலாளர் குணசேகரன், ஐ.டி., விங் துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
