ADDED : ஏப் 03, 2026 08:00 PM

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று நரிமேடு, பாலுார், சன்னியாசிபேட்டை, எழுமேடு, சித்தரசூர், அகரம்,முத்துநாராயணபுரம்,முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட, 8 கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடம் தி.மு.க., அரசின் போதை கலாச்சார சீரழிவு , அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோபு, ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், ராமசாமி, நாகபூஷணம், மாவட்ட துணை செயலர் கவுரிபாண்டியன், பா.ம.க.ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், பிரேம்குமார், கலியவரதன், கவிராஜன், மேல்பட்டாம்பாக்கம் நகர செயலர் அர்ஜீனன், ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், இளைஞரணி செயலாளர் பிரபாகரன் , பா.ம.க., மாவட்ட தலைவர் கவுரிசங்கர், பா.ஜ.க., வினோத்குமார், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
